இந்தியா அந்தமான் கடலில் தனது முதல் திறந்தவெளி கடல் மீன் வளர்ப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ விஜய புரம், வடக்கு விரிகுடா அருகே அமைந்துள்ளது.
இது பூமி அறிவியல் அமைச்சகம் (MoES) மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் கடல் ஃபின்ஃபிஷ் வளர்ப்பு மற்றும் ஆழ்கடல் கடற்பாசி வளர்ப்பிற்கு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட திறந்தவெளி கடல் கூண்டுகளைப் பயன்படுத்துகிறது.
இது கடலோர வாழ்வாதாரங்களை உருவாக்குதல், கடல் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் கடல் சார் பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளைச் சோதித்து, எதிர்கால பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மேம்பாடுகளுக்கு ஒரு மாதிரியை வழங்கும்.