TNPSC Thervupettagam

PM-SYM திட்டம் 2025

March 8 , 2025 55 days 120 0
  • பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) திட்டத்தினைச் செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆனது சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, பரந்த அளவிலான விழிப்புணர்வு முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.
  • PM-SYM என்பது அமைப்புசாராதத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு நிதி சார் பாதுகாப்பை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டமாகும்.
  • இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் பட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினால் மேலாண்மை செய்யப்படுகிறது.
  • இந்திய அரசானது, 1:1 பங்கு அடிப்படையில் தொழிலாளிகளின் பங்கிற்கு இணையாக பங்களிப்பை வழங்குகிறது.
  • 60 வயதிற்குப் பிறகு மிகவும் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் ஆனது மாதத்திற்கு 3,000 ரூபாய் ஆகும்.
  • திட்டத்தின் பயனாளி உயிரிழந்துவிட்டால், மனைவி/கணவர் ஓய்வூதியத் தொகையில் 50% தொகையினைக் குடும்ப ஓய்வூதியமாகப் பெறுவார்.
  • குடும்ப ஓய்வூதியம் மனைவி/கணவருக்கு மட்டுமே பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்