TNPSC Thervupettagam

PMGSY குறித்த நிலைக்குழு அறிக்கை

August 14 , 2025 8 days 61 0
  • கிராமப்புற இணைப்பை மேம்படுத்துவதற்காக, பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) என்ற திட்டமானது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாக 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தனது 17வது அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்தது.
  • PMGSY திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட சாலைகளின் தரம் மற்றும் செயல்படுத்தல் குறித்த கடுமையான சிக்கல்களை இந்த அறிக்கை எடுத்துக் காட்டியது.
  • உள்ளூர் நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப சாலை வடிவமைப்புகள் மற்றும் அகலங்களை மாநில அரசுகள் சரி செய்ய அனுமதிப்பதற்காக சாலைக் கட்டுமான விதிமுறைகளை தளர்த்த இந்த அறிக்கை பரிந்துரைத்தது.
  • இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தினால் நிதியளிக்கப்பட்ட உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் கூடுதலாக 100 கி.மீ கிராமப்புறச் சாலைகளை அமைக்க இந்த அறிக்கை முன்மொழிந்தது.
  • சமீபத்திய மக்கள்தொகை தரவுகளைப் பயன்படுத்தி PMGSY-IV சாலை ஆய்வுகளைப் புதுப்பிக்கவும், சாலைத் தேர்வு மற்றும் ஒப்புதலுக்கு உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்பதை கட்டாயமாக்கவும் இந்த குழு அழைப்பு விடுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்