TNPSC Thervupettagam
August 22 , 2026 2 days 127 0
  • இந்தியப் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனமானது (POWERGRID) பிரதமர் வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டத்தின் (PMIS) 'எக்சிட் பாத்வேஸ்' கண்டுபிடிப்புக்கான அங்கீகரிக்கப் பட்ட கூட்டாளர் நிறுவன விருதைப் பெற்றது.
  • POWERGRID என்பது மின்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு மகாநவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும் (PSU).
  • வேலைவாய்ப்பு மற்றும் பணியமர்த்தல் ஆதரவுக்காக மின்சாரத் துறை திறன் சபையின் (PSSC) ரோஸ்கார் இணையதளத்தில் அனைத்து PMIS பயிற்சி பெறுநர்களின் பயிற்சி விவரங்களைப் பதிவேற்றியதற்காக POWERGRID-ஐ இவ்விருது அங்கீகரித்து உள்ளது.
  • இளைஞர்கள் மற்றும் தொழில்துறை ஈடுபாட்டிற்கான தேசிய வேலைவாய்ப்புப் பயிற்சி முயற்சியாக PMIS 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.
  • பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் புது தில்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் மையத்தில் PMIS தொழில்துறை விருதுகளை வழங்கியது.
  • மகிந்திரா அண்ட் மகிந்திரா லிமிடெட் ஒட்டுமொத்த தொழில்துறை சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, அதே சமயம் IBM இந்தியா பிரைவேட் லிமிடெட் 'திட்டம் செயல்படுத்துதலில் புதுமை' விருதைப் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்