பெரியார் புலிகள் வளங்காப்பகத்தில் (PTR) சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஐந்து புதிய நீர் நில வாழினங்கள் மற்றும் மூன்று புதிய ஊர்வன இனங்கள் இந்தப் பகுதியின் பதிவுகளில் சேர்க்கப் பட்டுள்ளன.
மொத்தம் 67 நீர் நில வாழ் இனங்கள் மற்றும் 82 ஊர்வன இனங்கள் கணக்கெடுப்பின் போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
67 இனங்களில் 53 (சுமார் 80%) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப் படுவதுடன், நீர் நில வாழ் இனங்களின் பன்முகத் தன்மை குறிப்பிடத்தக்கது.
ஊர்வனவற்றில், 12 இனங்கள் அருகி வரும் இனங்களின் பட்டியலில் உள்ளன.