TNPSC Thervupettagam

PVTG வாழ்விட உரிமைகள் – ஒடிசா

July 20 , 2026 10 days 132 0
  • 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் 8 குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்களை (PVTGs) உள்ளடக்கிய 10 வாழ்விட உரிமை கோரிக்கைகளை ஒடிசா அங்கீகரித்துள்ளது.
  • 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின் (FRA) பிரிவு 3(1)(e) இன் கீழ் உள்ள வாழ்விட உரிமைகள் காடுகள், புனிதத் தலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வாழ்வாதாரப் பகுதிகள் உள்ளிட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் (PVTGs) பாரம்பரிய வாழ்விடத்தை அங்கீகரிக்கின்றன.
  • இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒடிசா அதிகபட்சமாக 13 PVTG-களின் தாயகமாக விளங்குகிறது, இவை 14 மாவட்டங்களில் பரவியுள்ளன.
  • ஒடிசாவில் முதல் வாழ்விட உரிமைப் பட்டாவானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தியோகர் மாவட்டத்தில் உள்ள பவுடி பூயான் சமூகத்திற்கு வழங்கப்பட்டதுடன் இது 32 குடியிருப்புகளை உள்ளடக்கியது.
  • இதுவரை, 625 சமூகங்கள், 18,811 குடும்பங்கள் மற்றும் கிட்டத்தட்ட 1.65 மில்லியன் ஹெக்டேர் வனம் மற்றும் வருவாய் நிலங்களை உள்ளடக்கிய 10 கோரிக்கைகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • இந்தியாவின் முதல் வாழ்விட உரிமைப் பட்டா 2015-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பைகா சமூகத்திற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்