உலகளாவியப் பொருளாதாரக் கண்காணிப்பு அறிக்கையானது லண்டனை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு நிபுணத்துவ சேவை அமைப்பான PricewaterhouseCoopers (PwC) என்ற அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் போக்குகள் மற்றும் பிரச்சினைகளைக் கண்காணித்து முன்னணி நாடுகளுக்கான சமீபத்திய மதிப்பீட்டு விவரங்களை அளிக்கின்றது.
2019 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் தரவரிசையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளானது ஐக்கிய ராச்சியத்தினை முந்தி உலகளாவிய அட்டவணையில் அதனை 5-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த அறிக்கையானது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை ஐக்கிய ராச்சியத்திற்க்கு 1.6% ஆகவும் பிரான்ஸ் நாட்டிற்கு 1.7% ஆகவும் இந்தியாவிற்கு 7.6% ஆகவும் மதிப்பீடு செய்துள்ளது.
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் அதனைத் தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் உள்ளன.