2026 ஆம் ஆண்டிற்கான QS (Quacquarelli Symonds) நிர்வாக MBA தரவரிசையில் இந்திய நிறுவனங்களில் இந்திய மேலாண்மைக் கழகம் பெங்களூரு (IIM Bengaluru) 64-வது உலகளாவிய இடத்தைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது.
நிர்வாக MBA பிரிவில் உலகளாவிய முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நிறுவனம் IIM பெங்களூரு ஆகும்.
இந்திய வணிகப் பள்ளி (ISB), IIMகோழிக்கோடு, IIM இந்தூர், மேலாண்மைத் தொழில் நுட்பக் கழகம்காஜியாபாத், வோக்ஸன் வணிகப் பள்ளி மற்றும் IIM ராஞ்சி ஆகியவை இதில் இடம் பெற்றுள்ள மற்ற இந்திய நிறுவனங்களாகும்.
உலகளவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சைட் வணிகப் பள்ளி முதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து HEC பாரிஸ் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்லோன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.