இந்தியாவின் முதல் மித-அதிவேக பிராந்திய ரயில் சேவைகளுக்கு தேசியத் தலைநகர் மண்டலப் போக்குவரத்து கழகமானது, ‘RAPIDX’ என்று பெயரிட்டுள்ளது.
இந்த ரயில்கள் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு வழித் தடங்களில் இயக்கப் படும்.
தேசியத் தலைநகர் மண்டலம் முழுவதும் உள்ள பல முக்கிய நகர்ப்புறப் பகுதிகளை இணைப்பதற்காக இது செயல்படுத்தப்படும்.
தேசியத் தலைநகர் மண்டலப் போக்குவரத்துக் கழகம் (NCRTC) என்பது மத்திய அரசு மற்றும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பல மாநிலங்கள் இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும்.