சிங்கப்பூரில் விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவின் (RCEP - Regional Comprehensive Economic Partnership) வர்த்தக அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப் பட்டது.
இந்தியக் குழுவானது மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவால் தலைமை தாங்கப்பட்டது.
தற்போதைய ஆசியானின் (ASEAN) தலைமையாக சிங்கப்பூர் உள்ளதால் அது இந்த உச்சி மாநாட்டை நடத்தியது.
இந்த அமைச்சர்கள் மாநாட்டைத் தொடர்ந்து நவம்பர் 14, 2018 அன்று RCEP தலைவர்கள் உச்சி மாநாடானது நடைபெற்றது.