TNPSC Thervupettagam
June 17 , 2026 14 hrs 0 min 100 0
  • மிகப் பெரிய மின்துறை நிதி நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில், ஊரக மின்னாக்கக் கழகத்தை (REC Limited), மின் நிதி நிறுவனத்துடன் (PFC) இணைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டில், REC-இல் இந்திய அரசாங்கத்திற்கு இருந்த 52.63% பங்குகளை PFC நிறுவனம் ₹14,500 கோடிக்கு வாங்கியது.
  • இந்த இணைப்பிற்குப் பிறகு, REC-இன் அனைத்து சொத்துக்கள், பொறுப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகள் PFC-க்கு மாற்றப்படும் என்பதோடு மேலும் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 230-232 பிரிவுகளின் கீழ் REC ஒரு தனி சட்டப்பூர்வ நிறுவனமாக செயல்படுவது முடிவுக்கு வரும்.
  • பொதுத்துறை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) அளவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில், 2026-27 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்த இணைப்பு அறிவிக்கப்பட்டது.
  • மின் நிதி நிறுவனம் (PFC) 1986 ஆம் ஆண்டு 16 ஜூலை மாதத்தில் இணைக்கப்பட்டது என்பதுடன் இது மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, மேலும் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 'மகாரத்னா' அந்தஸ்தைப் பெற்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2010 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று PFC-ஐ உள்கட்டமைப்பு நிதி நிறுவனமாக (IFC) வகைப்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்