ஏப்ரல் 22 ஆம் தேதியன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை Resistance Front அமைப்பினை "வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு" என்றும் சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பு (SDGT) என்றும் நியமித்தது.
இது பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு கிளை அமைப்பாகும்.
இந்த முடிவை வரவேற்ற இந்தியா உலகில் உள்ள பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எடுத்துரைத்தது.
ஓர் அமைப்பை FTO ஆக நியமிப்பது என்பது அமெரிக்கச் சட்டத்தின் கீழ் அத்தகைய அமைப்புக்கு நிதியளித்தல், உதவி செய்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் உதவுதல் குற்றமாகும்