காணொலி மூலம் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஐக்கிய ராஜ்ஜிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பங்கேற்றனர்.
இந்த உச்சி மாநாட்டின் போது “Road Map 2030” (செயல்திட்டம் 2030) எனப்படும் ஒரு இலட்சியம் மிக்கத் திட்டத்தினை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இரு நாடுகளிடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இத்திட்டமானது உதவும்.
முக்கிய குறிப்புகள்
இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்ற மார்க் 2 எனப்படும் இலகுரக போர் விமானத்தினை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கு இந்தியாவும் ஐக்கிய ராஜ்ஜியமும் ஒப்புக் கொண்டுள்ளன.
COP 26 மாநாட்டில் ஒரு மகத்தான பலனை வழங்குவதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இந்தச் செயல்திட்டமானது இந்தியாவுக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் இடையே சுகாதாரத் துறையின் மீதான கூட்டாண்மையை விரிவுபடுத்தும்.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தடைகளை நீக்கவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
“இந்தியா-ஐக்கிய ராஜ்ஜிய ஒன்றிணைவு” அமலாக்கம் (Implement “India-UK Together”) (SAATH – SAATH) என்பது ஒரு கூட்டு கலாச்சாரப் பரிமாற்றத் திட்டமாகும்.
மேலும் குஜராத் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரின் (GIFT City) மேம்பாட்டினைத் துரிதப்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை அதிகப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.