மிகவும் செல்வாக்குமிக்க 100 இந்திய நிறுவனங்கள் - SAIL
May 7 , 2021
1533 days
798
- மும்பைப் பங்குச் சந்தையில் SAIL நிறுவனத்தின் பங்கானது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.135.60 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
- கடந்த ஆறு வாரங்களில் SAIL நிறுவனத்தின் பங்குகள் 85% உயர்ந்துள்ளன.
- இந்த நிறுவனமானது மிகவும் செல்வாக்குமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
- SAIL என்றால் இந்திய எஃகு ஆணையம் (Steel Authority of India Limited) என்பதாகும்.
- இது எஃகு நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
- இது ஐந்து பெரிய ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளை உள்ளடக்கியது. அவை,
- ரூர்கேலா எஃகு ஆலை,
- பிலாய் எஃகு ஆலை,
- துர்காபூர் எஃகு ஆலை,
- IISCO மற்றும்
- பொக்காரோ எஃகு ஆலை.
- மேலும் இந்த நிறுவனம் 3 சிறப்பு எஃகு ஆலைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை,
- விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலை
- சேலம் எஃகு ஆலை
- எஃகு உலோகக் கலவை ஆலை மற்றும் ஃபெரோ உலோகக் கலவை ஆலை, சந்திராப்பூர்
Post Views:
798