TNPSC Thervupettagam

SC அந்தஸ்து மற்றும் மதமாற்றச் சட்டம்

March 26 , 2026 15 hrs 0 min 56 0
  • இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் மட்டுமே பட்டியலிடப் பட்ட சாதியினர் (SC) அந்தஸ்தைக் கோர முடியும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்தத் தீர்ப்பு 1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடபட்ட சாதியினர்) உத்தரவின் 3-வது பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • வேறு எந்த மதத்திற்கும் மாறுவது, பட்டியலிடப் பட்ட சாதியினர் அந்தஸ்தை உடனடியாக இழக்க வழி வகுக்கும் என்று அது கூறுகிறது.
  • இந்த விதியின் கீழ் சீக்கிய மதம் 1956 ஆம் ஆண்டிலும், பௌத்த மதம் 1990  ஆம் ஆண்டிலும் சேர்க்கப்பட்டன.
  • மற்றொரு மதத்திற்கு மாறிய பிறகு, ஒரு நபர் பட்டியலிடபட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பலன்களைக் கோர முடியாது.
  • மீண்டும் மதம் மாறுவதற்கு, அசல் சாதி குறித்த ஆதாரம், உண்மையான மதத் திரும்புதல் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் ஆகியவை அவசியமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்