டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பிரிவுகளைச் சேர்ந்த PhD ஆர்வலர்களுக்கான முதல் சிறப்பு சேர்க்கை இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது.
முனைவர் மீதான பட்டப் படிப்பில் தொடர்ந்து நிலவி வரும் SC/ST மாணவர்களுக்கான சேர்க்கை இடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த முக்கிய முன்னெடுப்பின் நோக்கமாகும்.
அரசாங்க இடஒதுக்கீடு விதிகளின் படி, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் உயர்கல்வி சேர்க்கையில் SC பிரிவினருக்கு 15% இடங்களையும் ST பிரிவினருக்கு 7.5% இடங்களையும் ஒதுக்க வேண்டும்.
இருப்பினும், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தரவு, PhD கல்வி நிலையில் பதிவான உண்மையான SC/ST சேர்க்கையானது இந்த இலக்குகளை விட குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.
2015-16 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை, SC சேர்க்கை 8.88 சதவீதத்திலிருந்து 9.69% ஆகவும், ST சேர்க்கை 0.97 சதவீதத்திலிருந்து 3.28% ஆகவும் உயர்ந்துள்ளது.