தேசியக் குற்ற ஆவணக் காப்பக வாரியமானது (NCRB) பெருநகரங்களில் சாதி அடிப்படையிலான குற்றங்களில் அதிகபட்ச அதிகரிப்பைக் காட்டுகின்ற 'இந்தியாவில் குற்றம் 2023' என்ற அறிக்கையை வெளியிட்டது.
ஜெய்ப்பூரில் 2021 ஆம் ஆண்டில் 361 ஆக இருந்த பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு (SCs) எதிரான குற்றங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 489 ஆக 35% அதிகரித்துள்ளதாகவும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (ST) எதிரான குற்றங்கள் 155 என்ற எண்ணிக்கையிலிருந்து 228 ஆக 47% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் 2021 ஆம் ஆண்டில் 166 ஆக இருந்த பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான குற்றங்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 285 ஆகப் பதிவாகியுள்ளன என்ற நிலையில் ST பிரிவினருக்கு எதிராக 15 குற்றங்கள் அங்கு பதிவாகியுள்ளதுடன், பெரு நகரங்களுள் இந்த நகரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் பெருநகரங்களில், ஜெய்ப்பூரில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான இரண்டாவது அதிகபட்ச வழக்குகளும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான அதிக வழக்குகளும் இருந்தன.
லக்னோவில் 2023 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான 517 குற்றங்கள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் அங்கு இருந்த எண்ணிக்கையை விட 93% அதிகம் ஆகும்.
மேலும் ஜெய்ப்பூர் (1,231), லக்னோ (1,205), கான்பூர் (804), மற்றும் பெங்களூரு (682) ஆகிய இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக ஒட்டுமொத்த வழக்குகள் பதிவாகி உள்ளன.