TNPSC Thervupettagam

தற்கொலைகள் குறித்த NCRB அறிக்கை 2023

October 4 , 2025 20 days 49 0
  • 2023 ஆம் ஆண்டு தேசியக் குற்றப் பதிவு வாரியத்தின் (NCRB) அறிக்கையானது, நோய்களால் ஏற்படும் தற்கொலைகளில் 3.2 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடுகிறது என்ற நிலையில் 2022 ஆம் ஆண்டில் 31,484 ஆக இருந்த இது 2023 ஆம் ஆண்டில் 32,503 ஆக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலைக்கான இரண்டாவது முக்கியக் காரணம் நோய்வாய்ப்பட்ட நிலையாகும்.
  • மொத்தத் தற்கொலைகளில் 32% என்ற பங்கினைக் கொண்ட குடும்பப் பிரச்சினைகளுக்கு அடுத்தபடியாக இது 19 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
  • மனநோய் காரணமாக ஏற்படும் தற்கொலைகள் ஆனது நோய்கள் காரணமான தற்கொலைகளின் பிரிவின் கீழ் 13,978 வழக்குகள் என்ற எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன.
  • 2022 ஆம் ஆண்டில் 1,251 ஆக இருந்த புற்றுநோய் காரணமாக ஏற்படும் தற்கொலைகள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 14 சதவீதம் அதிகரித்து 1,428 ஆக உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தில், தேசிய அளவிலான மொத்தத் தற்கொலைகளில் 21 சதவீதத்துடன் நோய் காரணமான அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 12 சதவீதமும் கர்நாடகாவில் 10 சதவீதமும் பதிவாகியுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் மாரடைப்பு தொடர்பான திடீர் உயிரிழப்புகளில் 10 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்பதோடு 2022 ஆம் ஆண்டில் 32,457 ஆக இருந்த இது 2023 ஆம் ஆண்டில் 35,715 ஆக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 56,450 ஆக இருந்த மொத்த திடீர் உயிரிழப்புகள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்து 63,643 ஆக உள்ளது, இது 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களில் (34 சதவீதம்) அதிக அளவில் பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், மொத்தம் 1,131 கருத்தரிப்பு தொடர்பான உயிரிழப்புகளுள் 80 ஆக இருந்த கருக்கலைப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் ஆனது சுமார் 59 சதவீதம் அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் 127 ஆக உயர்ந்துள்ளது.
  • NCRB அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் சுமார் 1,073 ஆக இருந்த கர்ப்ப காலத்தில் பெண்களின் உயிரிழப்புகள் 5.4 சதவீதம் அதிகரித்து, 2023 ஆம் ஆண்டில் 1,131 ஆக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்