SCO - பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புச் சபையின் சந்திப்பு
May 20 , 2022 1084 days 471 0
இந்திய அரசினால் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிற உறுப்பினர் நாடுகள் பல்வேறு பிராந்தியப் பாதுகாப்புப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் (RATS) ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்தியா கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதியன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புச் சபையின் ஒரு வருட கால தலைமைப் பொறுப்பினை ஏற்றது.
பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) தலைமையகம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அமைந்துள்ளது.