செக் குடியரசு நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரியத் தொங்கும் பாலமானது சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலமானது இரண்டு மலை முகடுகளை இணைக்கிறது.
மேலும் ஒரு பள்ளத்தாக்கிற்கு மேலே 95 மீட்டர் (312 அடி) உயரத்தில் தொங்கும்படி அமைக்கப் பட்டுள்ளது.
ஒரு கம்பி வட வாகனம் மூலமாக இந்தப் பாலத்தில் பயணிக்கலாம்.
இது 721 மீட்டர் அல்லது 2,365 அடி நீளம் கொண்டது.
சுற்றுலாப் பயணிகள் இப்பாலத்தில் 1,125 மீட்டர் உயரத்தில் உள்ளே நுழைந்து அதை விட 10 மீட்டர் உயரத்தில் இருந்து வெளியேறும் வகையில் இப்பாலம் அமைக்கப் பட்டு உள்ளது.
செக் குடியரசு நாட்டில் உள்ள இந்தப் பாலம், நேபாளத்தின் பாக்லங் பர்பத் நடைபாதை மேம்பாலத்தை விட 154 மீட்டர் நீளமானதாகும்.
தற்போது நேபாளத்தின் பாக்லங் பர்பத் நடைபாதை உலகின் மிக நீளமான தொங்கு நடைபாதை மேம்பாலம் என்ற கின்னஸ் உலகச் சாதனையைப் பெற்றுள்ளது.