ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழிப் பயன்பாட்டிற்கான ஊக்குவிப்பு
May 18 , 2022 1084 days 465 0
ஐக்கிய நாடுகள் சபையைப் பற்றி மக்களிடையேப் பரப்புவதற்கு இந்தி மொழியைப் பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கம் 800,000 அமெரிக்க டாலர்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ளது.
‘இந்தி @ ஐநா’ திட்டமானது, 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுத் தகவல் துறையுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள இந்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.