TNPSC Thervupettagam

மகோலின் உடன்படிக்கை

May 18 , 2022 1084 days 522 0
  • சர்வதேச காவல்துறை அமைப்பின், போட்டியில் முன் நிர்ணயம் மீதான நடவடிக்கைக் குழுவின் 12வது கூட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது
  • இது போட்டியில் முன் நிர்ணயம் போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான ஒத்திசைவு மிக்க உலகளாவிய முன்னெடுப்பினை மேற்கொள்வதற்கு வேண்டி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.
  • மத்தியப் புலனாய்வு அமைப்பானது இதில் பங்கேற்ற அமைப்புகளுள் ஒன்றாகும்.
  • பந்தயம் மற்றும் விளையாட்டு சார்ந்தச் சந்தைகளில் குற்றவியல் அமைப்புகள் அதிகளவில் செயல்படுவதால், தொழில்நுட்பம், தரவுத் தொகுப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் அதிகரித்து வரும் பயன்பாடுகள் குறித்து இதன் பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.
  • மகோலின் உடன்படிக்கை என்பது விளையாட்டுப் போட்டிகளைக் கையாள்வதற்கான ஐரோப்பிய சபையின் ஒரு உடன்படிக்கையாகும்.
  • இது போட்டியில் முன் நிர்ணயம் போன்ற செயல்பாடுகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பலதரப்பு ஒப்பந்தமாகும்.
  • இது 2019  ஆம் ஆண்டு செப்டம்பர் 01 முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்