TNPSC Thervupettagam

SDG குறித்த தன்னார்வ தேசிய மதிப்பாய்வு

August 30 , 2025 7 days 56 0
  • ஐக்கிய நாடுகளின் உயர் மட்ட அரசியல் மன்றத்தில் (HLPF) நிலையான மேம்பாட்டு இலக்குகள் குறித்த (SDG) தனது மூன்றாவது தன்னார்வத் தேசிய மதிப்பாய்வு (VNR) அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது.
  • நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதற்கான முன்னேற்றத்தை உலக நாடுகள் மதிப்பிடவும் அது குறித்த அறிக்கையினை முன்வைக்கவும் VNR செயல்முறை அனுமதிக்கிறது.
  • இந்தியாவின் 2025 ஆம் ஆண்டு அறிக்கை, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப் பட்ட அதன் முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றுகிறது.
  • நிதி ஆயோக் அமைப்பானது, அனைத்து நிலை நிர்வாகத்தையும், குடிமைச் சமூகத்தையும் உள்ளடக்கிய முழு அரசு மற்றும் முழு சமூக அணுகுமுறையின் மூலம் VNR தயாரிப்பை வழிநடத்தியது.
  • SDG உள்ளூர்மயமாக்கல் மாதிரியானது மாவட்டங்கள், தொகுதிகள் மற்றும் கிராமங்களிலிருந்து அதிகப்படியான/தீவிரப் பங்கேற்பை உள்ளடக்கியது.
  • 2011–12 ஆம் ஆண்டில் 16.2% ஆக இருந்த தீவிர வறுமை நிலையானது, 2022–23 ஆம் ஆண்டில் 2.3% ஆக குறைக்கப்பட்டது என்பதோடு இது 171 மில்லியன் மக்களின் நிலையை உயர்த்தியது.
  • 2004–05 ஆம் ஆண்டில் 204.6 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2023–24 ஆம் ஆண்டில் 332.3 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
  • உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தற்போது பெண்கள் 45 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கு பெற்றுள்ளனர்.
  • 2005-06 ஆம் ஆண்டில் 47% ஆக இருந்த 20 முதல் 24 வயதுடைய பெண்களிடையே குழந்தை திருமண விகிதம், 2019-21 ஆம் ஆண்டில் 23.3% ஆகக் குறைந்துள்ளது.
  • ஜல் ஜீவன் திட்டம் (JJM) ஆனது கிராமப்புற வீடுகளில் 2019 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த குடிநீர்க் குழாய் அணுகலை 80 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியது.
  • புதைபடிவ எரிபொருள் சாராத மூலங்கள் தற்போது இந்தியாவின் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி திறனில் 47.37% பங்கினைக் கொண்டுள்ளன.
  • உலகளாவியப் புத்தாக்கக் குறியீட்டில் (GII) 2020 ஆம் ஆண்டில் 48வது இடத்திலிருந்த இந்தியாவின் தரவரிசை 2024 ஆம் ஆண்டில் 39வது இடத்திற்கு முன்னேறியது.
  • 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரலை எட்டுவதற்கும், 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) நிலையை அடைவதற்குமான இந்தியாவின் உள்ளடக்கிய, புதுமையான மற்றும் தரவு சார்ந்தப் பயணத்தை VNR 2025 பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்