ஐக்கிய நாடுகளின் உயர் மட்ட அரசியல் மன்றத்தில் (HLPF) நிலையான மேம்பாட்டு இலக்குகள் குறித்த (SDG) தனது மூன்றாவது தன்னார்வத் தேசிய மதிப்பாய்வு (VNR) அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது.
நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதற்கான முன்னேற்றத்தை உலக நாடுகள் மதிப்பிடவும் அது குறித்த அறிக்கையினை முன்வைக்கவும் VNR செயல்முறை அனுமதிக்கிறது.
இந்தியாவின் 2025 ஆம் ஆண்டு அறிக்கை, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப் பட்ட அதன் முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றுகிறது.
நிதி ஆயோக் அமைப்பானது, அனைத்து நிலை நிர்வாகத்தையும், குடிமைச் சமூகத்தையும் உள்ளடக்கிய முழு அரசு மற்றும் முழு சமூக அணுகுமுறையின் மூலம் VNR தயாரிப்பை வழிநடத்தியது.
SDG உள்ளூர்மயமாக்கல் மாதிரியானது மாவட்டங்கள், தொகுதிகள் மற்றும் கிராமங்களிலிருந்து அதிகப்படியான/தீவிரப் பங்கேற்பை உள்ளடக்கியது.
2011–12 ஆம் ஆண்டில் 16.2% ஆக இருந்த தீவிர வறுமை நிலையானது, 2022–23 ஆம் ஆண்டில் 2.3% ஆக குறைக்கப்பட்டது என்பதோடு இது 171 மில்லியன் மக்களின் நிலையை உயர்த்தியது.
2004–05 ஆம் ஆண்டில் 204.6 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2023–24 ஆம் ஆண்டில் 332.3 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தற்போது பெண்கள் 45 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கு பெற்றுள்ளனர்.
2005-06 ஆம் ஆண்டில் 47% ஆக இருந்த 20 முதல் 24 வயதுடைய பெண்களிடையே குழந்தை திருமண விகிதம், 2019-21 ஆம் ஆண்டில் 23.3% ஆகக் குறைந்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் (JJM) ஆனது கிராமப்புற வீடுகளில் 2019 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த குடிநீர்க் குழாய் அணுகலை 80 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியது.
புதைபடிவ எரிபொருள் சாராத மூலங்கள் தற்போது இந்தியாவின் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி திறனில் 47.37% பங்கினைக் கொண்டுள்ளன.
உலகளாவியப் புத்தாக்கக் குறியீட்டில் (GII) 2020 ஆம் ஆண்டில் 48வது இடத்திலிருந்த இந்தியாவின் தரவரிசை 2024 ஆம் ஆண்டில் 39வது இடத்திற்கு முன்னேறியது.
2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரலை எட்டுவதற்கும், 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) நிலையை அடைவதற்குமான இந்தியாவின் உள்ளடக்கிய, புதுமையான மற்றும் தரவு சார்ந்தப் பயணத்தை VNR 2025 பிரதிபலிக்கிறது.