அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி, வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பங்குதாரர்கள் மீது பிரிவு 301 விசாரணையைத் தொடங்கினார்.
Special 301 அறிக்கை என்பது 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு அறிக்கையாகும்.
அறிவுசார் சொத்துரிமைகளுக்கு (IPR) போதுமான பாதுகாப்பை வழங்காத நாடுகளை இது அடையாளம் காண்கிறது.
மேலும், அமெரிக்க அறிவுசார் சொத்து உரிமையாளர்களுக்கு நியாயமான சந்தை அணுகல் கிடைப்பதையும் இந்த அறிக்கை மதிப்பீடு செய்கிறது.
இதில் நாடுகளானது முன்னுரிமை வெளிநாட்டு நாடு, முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியல் மற்றும் கண்காணிப்புப் பட்டியல் என வகைப்படுத்தப்படுகின்றன.