இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் ஆகியவை கங்கை மற்றும் கோதாவரி நதியின் தூய்மைக்காக உயிரித் தொழில்நுட்ப அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு அமைப்பை ஏற்படுத்த உள்ளன.
இந்தத் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையினால் நிதியளிக்கப் படுகின்றது.
இதன் குறிப்பிட்ட முக்கிய இலக்கு மாசுபட்ட நீருக்காக குறைந்த செலவு கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட உயிரி ஆக்ஸிஜனேற்ற அமைப்பை உருவாக்குவதாகும்.
SPRING திட்டம் என்பது நீர் வளங்கள் மற்றும் புதிய உயிரித் தொழில்நுட்ப சுத்திகரிப்புத் தீர்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைச் செயல்படுத்துதலுக்கான உத்திசார் திட்டமிடல் என்பதாகும் (SPRING - Strategic Planning for Water Resources and Implementation of Novel Biotechnical Treatment solutions and Good Practices).