இந்தியாவில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் 2025–26 ஆம் கல்வியாண்டு முதல் Study in India (SII) வலை தளத்தில் பதிவு செய்வதை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கட்டாயமாக்கியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உயர்கல்வி நிறுவனங்கள் (HEI) விதிவிலக்கு எதுவும் இல்லாமல் SII வலை தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி படிப்புகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டுகள் தற்போது UGC அறிவுறுத்தல்களின்படி SII வலை தளத்துடன் நேரடியாக இணைக்கப் படும்.
இதுவரை, இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லை, இதனால் நுழைவு இசைவுச் சீட்டுகளின் செயல்முறை நிலையைக் கண்காணிப்பதிலும், காலாவதியான வழக்குகளிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன.