மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) ஆகியவை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 04 முதல் 10 ஆம் தேதி வரை மெய்நிகர் மனநல தொடரை நடத்த உள்ளன.
இந்தத் திட்டமானது, CBSE வாரியத்துடன் இணைக்கப்பட்டப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை இலக்காகக் கொண்டு அவர்களின் மன நலனை மேம்படுத்துவதையும், மன நலம் தொடர்பாக நிலவும் தவறான கருத்துகளைக் குறைப்பதையும் இலக்காக நிர்ணயித்து உள்ளது.
உளவியல் ரீதியான மீள்தன்மையை உருவாக்குவதையும் கல்வி சார்ந்து எழும் மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்தத் தொடரானது அக்டோபர் 10 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக மனநல தினத்தன்று முடிவடைகிறது.