TNPSC Thervupettagam

SUMAN செயல்வரை திட்டம் 2030

July 5 , 2026 3 days 72 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல சபையின் 16வது மாநாட்டில் 'சுமன் செயல்வரை திட்டம்   2030' வெளியிடப் பட்டது.
  • இது இந்தியாவில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திசார் கட்டமைப்பாகும்.
  • இது RMNCHA+N (இனப்பெருக்க, தாய், பச்சிளம் குழந்தை, குழந்தை, வளரிளம் பருவத்தினர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் தாய்மார் இறப்பு விகிதத்தை (MMR) 1 லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 70-க்குக் கீழ் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (NMR) மற்றும் குழந்தை இறப்பு விகிதம் (IMR) ஆகியவற்றைக் குறைப்பதையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • இது இலக்கு அடிப்படையிலான தலையீடுகளுக்காக 13 அதிகக் கவனம் செலுத்தப் படும் மாநிலங்களில் உள்ள 130 மாவட்டங்களை உள்ளடக்கியது.
  • இதில் டிஜிட்டல் கண்காணிப்பு, அவசர மகப்பேறு பராமரிப்பு மற்றும் அதிக ஆபத்து உள்ள கர்ப்பங்களைக் கண்காணிப்பது ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்