மத்திய அரசின் மலிவான மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி வழங்கும் சிறப்புத் திட்டத்தின் (Special Window for Affordable & Mid Income Housing - SWAMIH) முதல் குடியிருப்பு வசதி திட்டமானது நிறைவடைந்துள்ளது.
மும்பையின் புறநகர்ப் பகுதியிலுள்ள ரிவாலி பூங்காவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பானது இந்தியாவில் SWAMIH நிதியின் கீழ் நிதி உதவி பெறும் முதல் குடியிருப்பு வசதி வழங்கும் திட்டமாகும்.
SWAMIH நிதியானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீதாராமன் அவர்களால் தொடங்கப் பட்டது.
நிதிப் பற்றாக்குறையினால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான குடியிருப்பு வசதி திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக SWAMIH முதலீட்டு நிதியானது உருவாக்கப் பட்டது.
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் தான் இந்த நிதியின் நிர்வாகி ஆவார்.