தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக தமிழ்நாடு அரசின் உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, நிதித் துறை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அன்று ஓர் அரசாணையை (G.O.) வெளியிட்டது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பணியில் சேரும் அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயமாக TAPS திட்டத்தின் கீழ் உள்ளடங்குவர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் உள்ள ஊழியர்களில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்கள் TAPS திட்டத்தின் கீழ் உள்ளடங்குவர்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு CPS திட்டத்தின் கீழ் பணியில் இருந்த ஊழியர்கள், ஓய்வு பெறும் நேரத்தில் TAPS அல்லது CPS திட்டப் பலன்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
TAPS திட்டத்தின் கீழ், ஊழியர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 50% தொகைக்குச் சமமான உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள் என்ற நிலையில் இதில் 10% பங்களிப்பு ஊழியரால் வழங்கப்படும் என்பதோடு மீதமுள்ள தொகை மாநில அரசால் செலுத்தப்படும்.