மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்கள் மத்தியில் தொலை தொடர்பு மன நலம் சார்ந்த உதவி வழங்கீட்டு மற்றும் வலையமைப்பு என்ற திட்டத்தினை (Tele-MANAS) தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, உலக மனநல தினத்தை முன்னிட்டுத் தொடங்கப் பட்டு உள்ளது.
Tele-MANAS முன்னெடுப்பு ஆனது நாடு முழுவதும் இலவச தொலை தொடர்பு மன நலம் சார்ந்த உதவிச் சேவைகளை இரவு பகலாக முழு நேரமும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறிப்பாக தொலைதூர அல்லது குறைந்த அளவு சேவை கிடைக்கப் பெறும் பகுதிகளில் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அழைப்பாளர்கள் இந்த சேவைகளைப் பெறுவதற்கு ஏற்ப தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க வழிவகை கொண்ட கட்டணமில்லா எண் ஒன்று நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.