இந்திய விமானப் படையின் 90வது ஆண்டு விழாவையொட்டி, இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கான ஆயுத அமைப்புப் பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகுப் புதியச் செயல்பாட்டுப் பிரிவு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது முக்கியமாக வான்வழி பாயும் ஏவுகணைகள், நிலம் விட்டு வான் பாயும் ஏவுகணைகள், தொலைதூர இயக்க விமானம், இரட்டை மற்றும் பல பணியாளர்கள் கொண்ட விமானங்களில் ஆயுத அமைப்புச் செயல்பாட்டு அமைப்புகள் ஆகிய நான்கு சிறப்புப் பிரிவுகளில் பணியாளர்களை நியமிப்பதற்கு முக்கியமானதாகும்.