வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) ஆனது தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகளவில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
உலகளாவியத் தரவரிசையில் ஆசியாவானது பாதிக்கும் மேற்பட்ட சில இடங்களைப் பிடித்து ள்ளது.
இந்தத் தரவரிசைகளில் முதல் 50 இடங்களில் 22 இடங்களை தற்போது ஆசியக் கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன.
மொத்தம் 135 இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு THE தரவரிசையில் இடம் பெற்றன.
இந்தியாவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (41வது இடம்) மற்றும் லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம் (48வது இடம்) ஆகியவை சிறந்தச் செயல்திறன் கொண்டவையாக இடம் பெற்றுள்ளன.
JSS உயர் கல்விக் கழகம் (48வது இடம்) மற்றும் ஷூலினி பல்கலைக்கழகம் (48வது இடம்) ஆகியவை முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
இதர இந்தியப் பல்கலைக்கழகங்கள் 100க்கும் பிறகான தரவரிசையில் இடம் பெற்று உள்ளன.