TIME இதழின் 100 மிகவும் செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியல்
September 20 , 2021 1519 days 705 0
TIME இதழானது தனது வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலானது சிறந்த நபர்கள், முன்னோடிகள், நிபுணர்கள், கலைஞர்கள், தலைவர்கள் மற்றும் புதுமைப் படைப்பாளர்கள் என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சீரம் இந்திய நிறுவனத் தலைமை நிர்வாக அலுவலர் அதார் பூனாவாலா ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தாலிபன் துணைப் பிரதமர் முல்லா அப்துல்கானி பராதரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்தியா ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் மோடி போன்ற 3 முக்கியத் தலைவர்களைக் கொண்டது என TIME இதழ் தெரிவித்துள்ளது.