முதலாவது அனைத்து சுற்றுலா குழுவினர் – “பூமியைச் சுற்றும் பயணம்”
September 20 , 2021 1519 days 660 0
ஸ்பேக்ஸ் X நிறுவனத்தின் ஒரு ராக்கெட்டானது நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.
இதில் பயணம் செய்பவர்கள் கிரிஷ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ரொக்டர், ஜாரெட் ஐசக் மேன் மற்றும் ஹேலி ஆர்சீனாக்ஸ் ஆகியோராவர்.
இன்ஸ்பிரேசன் 4 ராக்கெட்டின் பயணிகள் தற்போது சுற்றுப் பாதையில் உள்ளதாக ஸ்பேஸ் X நிறுவனம் அதிகார ப்பூர்வமாக தெரிவித்தது.
இது முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் முதல் சுற்றுப் பாதை விமானமாகும்.
350 மைல் உயரத்திலுள்ள சுற்றுப் பாதையில் சுற்றி வரும் 13 அடி அகலமுள்ள ‘க்ரூ டிராகன்’ என்ற பயணிகள் பெட்டகத்தில் இந்தப் பயணிகள் மூன்று நாட்கள் செலவிட உள்ளனர்.
டிராகன் பெட்டகமானது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கு அப்பால் 573 கி.மீ உயரத்தில் நிறுத்தப்பட உள்ளது.