TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 26 , 2025 4 days 65 0
  • நீதிக்கட்சித் தலைவரும், மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான P.T. இராஜனின் வாழ்க்கை மற்றும் மரபு குறித்த 'திராவிட அறநெறியாளர் தமிழ்வேல் P.T. இராஜன் வாழ்வே வரலாறு' என்ற ஒரு புத்தகத்தினை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
  • தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கம்பிவடச் சேவைத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இணை ஆலோசகர் M.ரேவதியை  சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தில் (ITU) உள்ள வானொலி தகவல் தொடர்பு வாரியத்தின் இயக்குநர் பதவிக்காக என்று இந்திய அரசினால் பரிந்துரைக்கப் படும் ஒரு வேட்பாளராக இந்தியா அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது.
  • அமராவதியில் இந்தியாவின் முதல் துளிமக் கணினியியல் கிராமத்தினை நிறுவுவதில் ஆந்திரப் பிரதேச மாநில அரசு முன்னேற்றம் கண்டுள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் "Power Hungry: How AI Will Drive Energy Demand" என்ற ஒரு அறிக்கையின் படி, உலகளாவிய அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவினை ஒருங்கிணைப்பது 2025 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுதோறும் உலகளாவிய உற்பத்தியைச் சுமார் 0.5 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தெலுங்கானா மாநில அரசாங்கமும் முன்னணி ஜப்பானிய நிறுவனங்களும் இணைந்து ஐதராபாத்தில் ஒரு சுற்றுச்சூழல் நகரத்தினை நிறுவ உள்ளன.
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறைகள் ஆணையம் (KVIC) ஆனது, 2024-25 ஆம் நிதியாண்டில் 1.70 லட்சம் கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • காட்டு எருதுகளின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பை அங்கீகரிக்கும் விதமாக, நேபாள அரசாங்கம் ஆனது ஏப்ரல் 20 ஆம் தேதியை தேசியக் காட்டு எருதுகள் தினமாக அறிவித்துள்ளது.
  • அமெரிக்கத் துணை அதிபர் J.D. வான்ஸ் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு முதல் முறையாக சமீபத்தில் வருகை தந்தார்.
  • கோயம்புத்தூர் நகரில் உள்ள கங்கா மருத்துவமனையானது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான கடுமையான மூட்டுத் தாக்கம், மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் மூட்டு அகநோக்கி வழி (ஆர்த்ரோஸ்கோபி) அறுவைச் சிகிச்சைகளில் ஒரு உலகளாவியச் சிறப்பு மையமாக (GCOE) நியமிக்கப்பட்டு உள்ளது.
    • இது உலகில் மூட்டுத் தாக்கத்தின் விளைவு மாற்று அறுவை சிகிச்சை என்பதற்கான முதல் GCOE மையமாகும்.
  • புது டெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் உலகின் 17வது தடகள வீரர்களுக்கான உடல்நிலைத் தகவல் பதிவேடு மேலாண்மைப் பிரிவினை இந்தியா திறந்து வைத்துள்ளது.
    • இது விளையாட்டு வீரர்களின் உடலியல் தகுதிசார் தகவல் பதிவேடுகளை மிக நன்கு கண்காணித்து நிர்வகிப்பதற்கும், நியாயமான விளையாட்டுப் போட்டிகளை உறுதி செய்வதற்கும், மிகவும் தூய்மையான முறையிலான விளையாட்டுப் போட்டிகளின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்