TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 2 , 2025 19 days 61 0
  • தமிழ்நாடு மாநிலச் சட்டசபையானது, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமித்தல் மற்றும் பதவி நீக்குவதில் ஆளுநர் / வேந்தரின் அதிகாரங்களை அரசாங்கத்திடம் மாற்றுவதற்கான ஒரு மசோதாவினை ஏற்றுள்ளது.
  • கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மார்க் கார்னி அந்த நாட்டின் பிரதமராக பதவியில் தொடர உள்ளார்.
  • திரைப்படத் தயாரிப்பாளர் பயல் கபாடியாவிற்கு மதிப்புமிக்கப் பிரெஞ்சு விருதான 'ஆஃபீசியர் டான்ஸ் எல்'ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்' (Officer of the Order of Arts and Letters) வழங்கப்பட்டுள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) நிறுவனரான கிளாஸ் ஷ்வாப் சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தலைவர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
  • பொள்ளாச்சி நெட்டை தென்னை என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி நெட்டைத் தேங்காய்க்குப் புவிசார் குறியீடு (GI) பெறுவதற்காக வேண்டி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
    • பொள்ளாச்சி நெட்டைத் தேங்காய்களுக்கான மிக முக்கிய சாகுபடிப் பகுதிகளில் ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் பொள்ளாச்சி தெற்குத் தொகுதிகள் ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்