இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) ஆனது, 2024-25 ஆம் நிதியாண்டில் 145.5 மில்லியன் டன் என்ற இதுவரையில் இல்லாத அதிகளவிலான சரக்குப் போக்குவரத்து பதிவானதாக அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு "விண்வெளி மற்றும் பெருமளவிலான பேரிடர்கள் மீதான சர்வதேச சாசனம்" எனும் முக்கிய அமைப்பின் தலைமைப் பொறுப்பை இஸ்ரோ ஏற்றுக் கொண்டுள்ளது.
எண்ணிமச் சந்தைச் சட்டத்தினை (DMA) மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு முறையே 500 மில்லியன் யூரோக்கள் (568 மில்லியன் டாலர்) மற்றும் 200 மில்லியன் யூரோக்கள் (227 மில்லியன் டாலர்) ஐரோப்பிய ஆணையம் ஆனது முதல் முறையாக அபராதம் விதித்துள்ளது.
சுவச் பாரத்-நகர்ப்புறத் திட்டத்தின் கீழ், காஜியாபாத் நகரானது அதிநவீன மூன்றாம் நிலை கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தை (TSTP) உருவாக்குவதற்காக என 150 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக வேண்டி இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட பசுமை நகராட்சிப் பத்திரத்தினை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது.
'இணைய சங்கேதப் பணங்கள், திரள் நிதியினைத் திரட்டல் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மூலம் தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை (CFT) எதிர்கொள்வது' என்பது தொடர்பான மத்திய ஆசியக் குடியரசுகளுக்கான (CARs) முதல் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.
ஐந்து மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல நிபுணர்களை இது ஒருங்கிணைத்தது.