தமிழ்நாடு மாநிலச் சட்டசபையானது, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமித்தல் மற்றும் பதவி நீக்குவதில் ஆளுநர் / வேந்தரின் அதிகாரங்களை அரசாங்கத்திடம் மாற்றுவதற்கான ஒரு மசோதாவினை ஏற்றுள்ளது.
கனடாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மார்க் கார்னி அந்த நாட்டின் பிரதமராக பதவியில் தொடர உள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் பயல் கபாடியாவிற்கு மதிப்புமிக்கப் பிரெஞ்சு விருதான 'ஆஃபீசியர் டான்ஸ் எல்'ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்' (Officer of the Order of Arts and Letters) வழங்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) நிறுவனரான கிளாஸ் ஷ்வாப் சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தலைவர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
பொள்ளாச்சி நெட்டை தென்னை என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி நெட்டைத் தேங்காய்க்குப் புவிசார் குறியீடு (GI) பெறுவதற்காக வேண்டி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
பொள்ளாச்சி நெட்டைத் தேங்காய்களுக்கான மிக முக்கிய சாகுபடிப் பகுதிகளில் ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் பொள்ளாச்சி தெற்குத் தொகுதிகள் ஆகியன அடங்கும்.