TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 4 , 2025 17 days 62 0
  • ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முன்னெடுப்புகளின் ஒரு செயல் திட்டத்தினைப் பட்டியலிடுவதற்காக, நதி நகரங்கள் கூட்டணியின் (RCA) கீழ் வருடாந்திர விரிவான செயல் திட்டத்திற்கு தேசியத் தூய்மை கங்கை திட்டம் (NMCG) ஒப்புதல் அளித்து உள்ளது.
  • பீகார் மாநிலமானது, 2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, புத்த கயாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மதுபானி ஓவியம் (201.17 சதுர அடி) மற்றும் 375 புத்தத் துறவிகளால் மேற்கொள்ளப் பட்ட பாடல் கிண்ண ஒலிப்பு நிகழ்வு ஆகிய இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியைச் சான்றளிப்பதற்கும் வெளிப்படைத்தன்மை, கண்டறியும் தன்மை மற்றும் சந்தை நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்கும் என்று ஒரு மிக வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்தியப் பசுமை ஹைட்ரஜன் சான்றிதழ் திட்டத்தினைத் (GHCI) தொடங்கியுள்ளது.
  • தேசியத் துளிமக் கணிம (குவாண்டம்) திட்டத்தின் (NQM) கீழ், QNu லேப்ஸ் நிறுவனமானது, மேகக்கணிமை, உள்ளகச் சேவையகம் அல்லது கலப்பு நுட்பம் என எந்தவிதச் சூழலிலும் தடையற்றக் குறியாக்கவியல் மேலாண்மையைச் செயல்படுத்துகின்ற QShield எனப்படும் உலகின் முதல் மற்றும் தனித்துவமான தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள QpiAI நிறுவனமானது, QpiAI-இண்டஸ் எனப்படும் இந்தியாவின் முதல் முழு மென்பொருள் உருவாக்கக் கட்டமைப்பு துளிமக் கணினியினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்திப் பருவத்திற்கான கரும்பின் நியாயமான மற்றும் இலாபகரமான விலையை (FRP) குவிண்டாலுக்கு 355 ரூபாயாக அதிகரிக்க மத்திய அரசு தன் ஒப்புதலை அளித்துள்ளதோடு இது முந்தையப் பருவத்தில் குவிண்டாலுக்கு 340 ரூபாயாக இருந்தது.
  • போஸ் நிறுவனத்தின் உயர் ஆற்றல் இயற்பியல் பரிசோதனைக் (HEP) குழுவைச் சேர்ந்த அறிவியலாளர்களுக்கு CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பானது, லார்ஜ் ஹாட்ரான் கொலைடருக்கான (LHC) ALICE ஒத்துழைப்பிற்கான அதன் ஒரு பங்களிப்பிற்காக அடிப்படை இயற்பியலில் மதிப்புமிக்க 2025 ஆம் ஆண்டு திருப்புமுனை பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
  • உள்நாட்டு நடவடிக்கை மூலம் பயன்மிகு, சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கடல் சார் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளை (MPAs) மேம்படுத்துவதற்காக 'Revive Our Ocean' என்ற புதிய உலகளாவிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • புதிய உறுதிப் படுத்தப்பட்டப் பாதிப்புகள் எதுவும் பதிவாகாமல் 42 நாட்கள் அளவிலான கட்டாய காலக்கெடுவினை நிறைவு செய்ததையடுத்து, உகாண்டா அரசானது எபோலா சூடான் வைரஸ் நோய் (SVD) பெருந்தொற்று முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்