TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 5 , 2025 15 days 52 0
  • மேகாலயாவில் உள்ள மவ்லிங்குங் (ஷில்லாங்கிற்கு அருகில்) முதல் அசாமில் உள்ள பஞ்ச்கிராம் (சில்சார் அருகே) வரையிலான NH-06 தேசிய நெடுஞ்சாலையில் பசுந்தட அணுகல் கட்டுப்பாட்டில் உள்ள 166.80 கிலோ மீட்டர் நீளத்திலான நான்கு வழியின் வருடாந்திரக் கலப்பு தவணை முறையில் (hybrid annuity model) மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஒரு முன்மொழிவினை மத்திய அரசானது அங்கீகரித்துள்ளது.
  • விளையாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • போடோஃபா உபேந்திர நாத் பிரம்மாவின் சிலையானது புது டெல்லியில் திறக்கப் பட்டுள்ளது மற்றும் டெல்லியின் கைலாஷ் காலனியில் உள்ள ஒரு சாலை போடோஃபா தலைவரின் நினைவாக 'போடோபா உபேந்திர நாத் பிரம்ம மார்க்கம்' என அதிகாரப் பூர்வமாக மறுபெயரிடப் பட்டுள்ளது.
  • ஒலிம்பிக்கில் பட்டம் பெற்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் மத்திய இளையோர் நலன் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை  அமைச்சரிடமிருந்து மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்