பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உலக வங்கி மேற்கொள்ளும் தனியார் துறை முதலீட்டு ஆய்வக (PSIL) முன்னெடுப்பில் இணைந்து உள்ளார்.
இந்தியாவில், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் வணிக ரீதியான சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தியானது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.01 மில்லியன் டன் (MT) ஆக பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் நிலக்கரி ஏற்றுமதியானது 16.81 மில்லியன் டன் (MT) ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 6,600 கோடி ரூபாய் முதலீட்டை இலக்காகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டு கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் மறுசுழற்சி கொள்கையினை அங்கீகரித்துள்ளது.
பாபுஜி மகாராஜின் 125வது பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் ஐதராபாத் அருகே உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் பாபுஜி வனம் எனப்படும் உலகின் முதல் ஆற்றல் மாற்றம் அம்சங்கள் கொண்ட தோட்டமானது திறக்கப் பட்டுள்ளது.
சர்வதேச அறிவியல் சமூகமானது, இந்தியப் பெருங்கடலின் மீதான மிகவும் நீண்டகால கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக வேண்டி கடலடிக் கம்பிவட முன்னெடுப்பு முயற்சியை மேற்கொள்வதற்காக இந்தியத் தேசியப் பெருங்கடல் தகவல் சேவைகள் மையத்தினை (INCOIS) தேர்ந்தெடுத்துள்ளது.