இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) ஆனது, கடல் மட்டத்திலிருந்து 8,485 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் ஐந்தாவது உயரமான சிகரமான மௌண்ட் மகாலுவில் வெற்றிகரமாக ஏறியுள்ளது.
இந்திய அரசானது, இந்தியாAI திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மிகவும் பெரிய மொழி மாதிரியை (LLM) உருவாக்குவதற்காக வேண்டி பெங்களூருவில் உள்ள சர்வம் எனும் புத்தொழில் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
கர்நாடக அரசானது, பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹெசராகட்டா என்ற புல்வெளிகளை "கிரேட்டர் ஹெசராகட்டா புல்வெளி வளங்காப்பகம்" ஆக அறிவித்து உள்ளது.
மத்தியப் புலனாய்வு வாரியம் (CBI) ஆனது, அமெரிக்க நாட்டினால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் ஹாக் (Operation Hawk) நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், சர்வதேசத் தொடர்புகளுடன் கூடிய இயங்கலை வழி சிறார் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் இணைய வெளிக் குற்ற வலையமைப்புகளை வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
இந்திய விமானப்படையானது (IAF) உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கை விரைவுச் சாலையின் சுமார் 3.5 கிலோ மீட்டர் நீள வழித் தடத்தில், அதன் "தரையிறக்க மற்றும் மேலெழும்பும்" ஒத்திகையை மேற்கொண்டது.
இது 24 மணி நேரமும் இயங்கும் போர் விமான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் விரைவுச் சாலையுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட விமான ஓடுபாதையாகும்.
உலகெங்கிலும் உள்ள மக்களின் புன்னகையையும் மகிழ்ச்சியையும் கொண்டாடச் செய்வதற்காக மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையானது (மே 04) உலக சிரிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.