உதகமண்டலத்தில் உள்ள அரசுத் தாவரவியல் பூங்காவில் (GBG) நடைபெறும் 127வது வருடாந்திர மலர் கண்காட்சியைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது, கார்பன் பிடிப்பு அமைப்பில் (CCS) விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னெடுப்பிற்காக வேண்டி சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் சேர்ந்து பிணைப்பு சார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு, மத்திய சேமக் காவல் படை (CRPF) மற்றும் காஷ்மீர் காவல்துறை ஆகியவை ‘Operation Nader’ என்ற பெயரில் ஒரு தீவிரவாத எதிர்ப்புக் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜேவர் விமான நிலையத்திற்கு அருகில் இந்தியாவின் 6வது குறைக்கடத்தி உற்பத்தி அலகினை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
மத்திய சேமக் காவல் படை மற்றும் சத்தீஸ்கர் காவல்துறை ஆகியவை இணைந்தக் கூட்டுப் படைகள் ஆனது, 'பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கை' என்ற ஒரு பெயரில் நக்சல் அமைப்புகளுக்கு எதிராக 21 நாட்கள் நீண்ட, இதுவரையில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொள்கின்றன.
2026 ஆம் ஆண்டில் மும்பையில் ஒரு புதிய வளாகம் திறக்கப்பட உள்ளதோடு, இல்லினாய்ஸ் டெக் நிறுவனமானது, இந்தியாவில் முழுமையான பட்டங்களை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் அமெரிக்கப் பல்கலைக்கழகமாக மாறி உள்ளது.
கம்போடியா நாடானது, சீனாவுடன் அதன் சமீபத்திய மற்றும் மிகப்பெரிய 'கோல்டன் டிராகன் கூட்டு இராணுவப் பயிற்சியை' நடத்துகிறது.