TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2025 15 days 58 0
  • நீலகிரியின் கூடலூர் வனப் பிரிவில் யானைகளைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு வனத்துறையானது, வெப்பநிலை அளவு சார்ந்த வகை புகை படமெடுக்கும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை ஒளியிழை இணைப்பு மூலம் ஒரு கிலோ மீட்டருக்கும் மிக அதிகமான தொலைவிற்கு என்று குவாண்டம் வலையமைப்பினைப் பயன்படுத்தி வெற்றிட அல்லது காற்று ஊடகத்திலான பாதுகாப்பான குவாண்டம் தகவல்தொடர்பு நுட்பத்தினைச் செயல் விளக்கிக் காட்டியுள்ளன.
  • லக்னோ ஆனது யுனெஸ்கோ அமைப்பின் அறுசுவை உணவியலின் ஒரு படைப்பாக்க நகரம் பட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரியதான ஆட்டோமொபைல் கதி சக்தி பல்நோக்குச் சரக்குப் போக்குவரத்து முனையம் ஆனது ஹரியானாவின் மானேசர் நகரில் உள்ள மாருதி சுசுகியின் உற்பத்தி மையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத் துறை சார்ந்த இணைய வெளி முகமையானது, மிகச் சமீபத்தில் 'சைபர் சுரக்சா' என்ற விரிவான இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியது.
  • கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (KeSCPCR) ஆனது, ரேடியோ நெல்லிக்கா எனும் குழந்தைகளுக்கான பிரத்தியேக இணைய வானொலி நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
  • கஜகஸ்தானின் முதல் திட்டமிடப்பட்ட அணு மின் நிலையத்தை உருவாக்குவதற்கான சர்வதேச கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு என்று ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • பிரேசில் நாடானது, பிரிக்ஸ் அமைப்பின் 10வது பங்குதார நாடாக வியட்நாம் நாடு அதிகாரப் பூர்வமாக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு அரசானது நெல் கொள்முதல் விலையைச் சாதாரண நெல் ரகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாகவும், ஒரு தரமான நெல் ரகத்திற்கு 2,545 ரூபாயாகவும் அறிவித்துள்ளது.
    • தற்போது பீகார் அரசானது ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3,500 ரூபாய் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்