ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலையானது 600 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, 8.8 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தைத் தொடர்ந்து முதல் முறையாக வெடித்தது.
2025 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்ற முஸ்கான்-XI நடவடிக்கையின் கீழ் சைபராபாத் (தெலுங்கானா) காவல்துறையினரால் குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுத்தல் மற்றும் சட்டவிரோத வேலைகளில் இருந்து மொத்தம் 1,374 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
விளையாட்டுத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கின்ற வகையில், இந்தியாவின் முதல் உரிமையாளர் நிறுவனங்கள் அடிப்படையிலான வில்வித்தை லீக் போட்டியானது அக்டோபர் மாதத்தில் புது டெல்லியில் தொடங்க உள்ளது.
அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு (AIFF) மற்றும் தெலுங்கானா அரசு ஆகியவை ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இந்தியாவின் முதல் மகளிருக்கான FIFA திறன் மேம்பாட்டு கழகத்தினைத் தொடங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தென் சீனக் கடலில் தங்கள் முதல் இருதரப்புக் கூட்டுக் கடற்படைப் பயிற்சியை நடத்தின.