TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 15 , 2025 15 hrs 0 min 11 0
  • சீனாவின் செங்டுவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு compound men’s individual archery போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ் வெண்கலம் வென்றார்.
  • மும்பை நகரானது, ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான 18வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது.
  • இந்தியக் கடற்படையானது, விசாகப்பட்டினத்தில் INS உதயகிரி (மும்பையில் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது.) மற்றும் INS ஹிம்கிரி (கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது) ஆகியவற்றை முதன்முறையாகப் படையில் இணைத்துள்ள நிலையில் இது பல்வேறு இந்தியக் கப்பல் கட்டும் தளங்களிலிருந்து பெறப்பட்ட இரண்டு முக்கிய கடற்படை போர்க் கப்பல்கள் ஒரு சேர படையில் இணைக்கப் பட்டதைக் குறிக்கிறது.
  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது, இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் விக்ரம்-1 ஏவு கலத்தின் முதல் கட்டமான KALAM 1200 மோட்டாரின் / இயக்கியின் முதல் நிலைச் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
  • பிரதமர் சமீபத்தில் மூன்று புதிய வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், மொத்த வந்தே பாரத் இரயில்களின் எண்ணிக்கை 150 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது.
  • கௌஹாத்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, அதன் மூங்கில் கட்டமைப்புகள் கொண்ட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டடக்கலையில் சிறந்து விளங்குவதற்காக 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கட்டடக்கலை விருதை வென்றது.
  • 4வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி (பட்டம் விடும்) திருவிழாவானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மகாபலிபுரத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற உள்ளது.
  • பழங்குடியினரை ஒரு பெரிய பேரழிவிலிருந்து பாதுகாத்ததற்காக டெண்டோங் மலையை கௌரவிக்கும் வகையில், சிக்கிமில் டெண்டோங் லோ ரம் ஃபாட் என்ற பழங்கால லெப்சா திருவிழா கொண்டாடப்பட்டது.
  • இந்திய அரசியலில் ஆளுகை மற்றும் அதிகாரப் பரவல் பற்றிய உள் கருத்துகளை கூறும் 'No Minister' என்ற புத்தகத்தினை சாந்தனு குப்தா என்பவர் எழுதியுள்ளார்.
  • நாட்டின் முதல் விலங்கு ஸ்டெம் செல் உயிரி வங்கியானது, ஐதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
  • சரிபார்க்கப்பட்ட குறைந்த ஆபத்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குவதற்காக SWAGAT-FI எனும் ஒற்றைச் சாளர அமைப்பினை SEBI முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்