ALLY தனிப்பயனாக்கப்பட்ட கண்புரை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி ரோபோடிக்/எந்திரத் தனிப்பயனாக்கப்பட்ட லேசர் கண்புரை அறுவை சிகிச்சையைச் செய்த இந்தியாவின் முதல் மற்றும் தெற்காசியாவின் இரண்டாவது அரசு நிறுவனமாக இராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (AHRR) அமைப்பு மாறுகிறது.
குஜராத்தின் சனந்த் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள குறைகடத்திகளுக்கான வடிவமைப்பின் முதல் உற்பத்தி வரையிலான முழுமையான புறத்திறனீட்ட ஒருங்குசேர்ப்பு மற்றும் சோதனைக்கான (OSAT) இந்தியாவின் முதல் சோதனைப் பகுதியினை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இணைந்து தொடங்கி வைத்தனர்.