இந்தியப் பிரதமர் புது டெல்லியில் நடைபெற்ற ஆரிய சமாஜத்தின் 150வது ஆண்டு நிறைவையும், மகரிஷி தயானந்த சரஸ்வதி அவர்களின் இருநூறாவது ஆண்டு விழாவையும் குறிக்கும் வகையிலான சர்வதேச ஆர்ய மகாசம்மேளனம் 2025 நிகழ்வில் உரையாற்றினார்.
சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான ஷென்சோ-21 பயணத்திற்காக நாட்டின் இளம் விண்வெளி வீரர் (32) மற்றும் கொறித்துண்ணிகள் தொடர்பான சீனாவின் முதல் விண்வெளி சுற்றுப்பாதை சார் உயிரியல் பரிசோதனையைக் குறிக்கின்ற நான்கு ஆய்வகப் பயன்பாட்டு எலிகள் உட்பட மூன்று பேர் கொண்ட குழுவுடன் கூடிய விண்கலத்தினை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசானது, தொழுநோயை அறிவிக்கத்தக்க ஒரு நோயாக அறிவித்து, அதன் பரவலைத் தடுப்பதற்காக அனைத்து சுகாதார வழங்குநர்களும் இரண்டு வாரங்களுக்குள் அதன் பாதிப்புகள் குறித்தப் புகாரளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, "2027 ஆம் ஆண்டிற்குள் தொழுநோய் பாதிப்பு இல்லாத மகாராஷ்டிரா என்ற நிலையை" அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கேரளா மாநிலமானது, தீவிர வறுமையை ஒழித்த முதல் இந்திய மாநிலமாக ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
கேரளாவின் மாநில உருவாக்க தினமான (கேரள பிரவி), 2025 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மாநிலச் சட்டமன்றத்தில் முதல்வர் இந்தச் சாதனையை அறிவித்தார்.